அக்காவின் கணவரால் சிறுமிக்கு நேர்ந்து வந்த கொடூரம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கிண்ணியாவில் மனைவியின் தங்கையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் அவரது வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நடுவூற்று, கிண்ணியா பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10 வயதுடைய மனைவியின் சொந்த தங்கையான சிறுமியை, மனைவி வெளியில் சென்றவுடன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த செயற்பாட்டில் சந்தேகநபர் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கணவன் மேல் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் மனைவி பொலிஸாருக்கு வழங்கிய தகவலால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்திய பரிசோதனைக்காக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.