நபரொருவரை மண் வெட்டியால் தாக்கிய இரு பெண்கள் விளக்கமறியலில்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிண்ணியாவில் குடும்ப தகராறு காரணமாக நபரொருவரை மண் வெட்டியால் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களையும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேலு உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்களை இன்று ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 32, 35 வயது உடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers