வயோதிப தாயை கல்லால் தாக்கி கொன்ற மகன்

Report Print Steephen Steephen in சமூகம்

கம்பஹா - தெல்கொட கோழி பண்ணை ஒன்றுக்கு அருகில் வயோதிப தாயாரை கல்லால் தாக்கி கொலை செய்த மகனை தாம் இன்று கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

48 வயதான சந்தேக நபர், 71 வயதான தாயை இவ்வாறு கொலை செய்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மகன், அருகில் கிடந்த சீமெந்து கற்களால் தாயை தாக்கியுள்ளதுடன் தாய் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் தெல்கொட பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.