வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனைக்கு எதிராக போராட்டம்

Report Print Sumi in சமூகம்

வடக்கில் அதிகரித்த போதைப் பொருள் பாவனை, மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுபடுத்த வலயுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் பிரதான பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்னால் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதனை கண்டித்தே ஜனநாயகத்துக்கான இளைஞர் அமைப்பானது இப் போராட்டத்தை மேலும் பல இளைஞர்களை இணைந்து மேற்கொண்டிருந்தது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், போதைப்பொருள் பாவனையை கட்டுபடுத்து, சிறுவர் பெண்கள் துஸ்பிரயோகத்தை கட்டுபடுத்த வேண்டும், தோட்டத் தொழிலாளர்களது சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்த வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

மேலும் இளைஞர்களது வேலைவாய்ப்புக்களை உறுதிப்படுத்த வேண்டும், இதற்கு அரசியல் தலமைகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரம் இப் போராட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.