மகிந்தவின் புதல்வரின் திருமணம் தொடர்பாக வெளியான புதிய புகைப்படம்

Report Print Steephen Steephen in சமூகம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்சவின் திருமண வைபவத்தில் அவரது சிறிய தந்தை பசில் ராஜபக்ச கலந்துக்கொள்ளவில்லை முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் எந்த உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ச, 24 ஆம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துக்கொண்டதுடன் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பசில் ராஜபக்ச திருமண வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை என சில சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

ராஜபக்ச குடும்பத்தில் ஏற்பட்டுள்ள தீவிர பதவி மோதலே இதற்கான காரணம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.