யாழ். சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க திறன் வகுப்பறை திறந்து வைப்பு

Report Print Vamathevan in சமூகம்

யாழ், நெல்லியடி மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றுள்ளது.

குறித்த விழா பாடசாலை அதிபர் நடராசா தேவராஜா தலைமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது முன்னாள் விவசாய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறன் வகுப்பறையை திறந்து வைத்து, பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் ஒளிமயமான மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக விசேட நிதியாக 5 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனனின் இளைஞர் அணி செயற்பாட்டாளர்கள், தொகுதிகாரியாலய இணைப்பாளர்கள் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், ஆசிரியர்கள், மாணவர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.