யாழ். நோக்கிச் சென்ற உத்தரதேவிக்கு வவுனியாவில் வரவேற்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்
244Shares

இந்திய - இலங்கை நல்லிணக்க உறவின் கீழ் வழங்கிவைக்கப்பட்ட புதிய புகையிரதமானது 'உத்தரதேவி புகையிரதமாக' வடக்கிற்கான பயணத்தை இன்று ஆரம்பித்தது.

குறித்த புகையிரதத்திற்கு வவுனியாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

காலை 6 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்ட உத்தரதேவி புகையிரதம் மதியம் 12.15 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தை அடைந்தது.

இதனை புகையிரத நிலைய உத்தியோகத்தர்கள், மக்கள் வரவேற்றனர். இருப்பினும் புகையிரதம் நிறுத்தப்படாது யாழ் நோக்கி சென்றது.

இதில் யாழ் மாணவர்களுக்கான புத்தகப் பைகள், அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து அமைச்சின் உயர்மட்ட குழுவினரும் செல்கின்றனர்.

இதேவேளை, வாயு சீராக்கி வசதி கொண்ட முதலாம் வகுப்பு பெட்டியும், இரண்டாம் வகுப்பு பெட்டியும் இப் புகையிரதத்தில் அடங்குவதுடன், 724 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கக் கூடியதாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.