கொழும்பு ஹொட்டலில் சுவிஸ் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்

Report Print Steephen Steephen in சமூகம்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர், கொழும்புக்கு வெளியில் உள்ள ஆடம்பர ஹொட்டலுக்குள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

ஹொட்டலுக்குள் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் தான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக பெண் சுற்றுலாப் பயணி மின்னஞ்சல் மூலம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தனது நண்பருடன் விடுமுறையில் இலங்கை வந்திருந்த சுவிட்சர்லாந்து பெண் கடந்த 21 ஆம் திகதி மசாஜ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது மசாஜ் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இளம் நபர் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இது குறித்து பெண், ஹொட்டல் முகாமைத்துவத்திடம் முறைப்பாடு செய்துள்ளதுடன் அவர்கள் திருப்தியான பதிலை வழங்கவில்லை எனவும் இதனையடுத்து சுற்றுலாப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தவிர கொழும்பில் உள்ள சுவிஸர்லாந்து தூதரகத்திலும் அந்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

அதேவேளை இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக கொழும்பில் உள்ள குறித்த ஹொட்டல் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

மசாஜ் நிலையத்தில் இரண்டு மணி நேரங்கள் இருந்து விட்டு, அந்த பெண் செய்த முறைப்பாடு தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் ஹொட்டல் முகாமைத்துவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஹொட்டலில் உள்ள பாதுகாப்பு கெமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு முகாமைத்துவத்தினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

அதேவேளை இந்த முறைப்பாடு குறித்து தாமும் விசாரணைகளை நடத்தி வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சும் கூறியுள்ளது.