முல்லைத்தீவில் சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் முற்றுகை

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் ஒன்று இன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன் போது 05 பெரல் கோடா மற்றும் 20 லீற்றர் கசிப்புடன் முவர் கைதாகியுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுதந்திரபுரம் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் சட்டவிரோத மது உற்பத்தி நடைபெறுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து இன்று காலை குறித்த மது உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது மூவர் கைதாகியுள்ளனர்.

இவ்வாறு கைதாகி சந்தேக நபர்களையும் தடயப்பொருட்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers