திடீரென தீப்பற்றிய இறைச்சி விற்பனை நிலையம்!

Report Print Theesan in சமூகம்

வவுனியா - குருமன்காட்டில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையத்தில் இன்று மதியம் திடீரென தீப்பற்றியெரிந்துள்ளது.

வவுனியா குருமன்காட்டு பகுதியில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையத்தின் மின்மானியில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் இந்த அசம்பாவீதம் இடம்பெற்றுள்ளது.

அவ்விடத்தில் நின்ற பொதுமக்கள் உடனடியாக செயற்பட்டு தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளை, இவ் தீ விபத்தினால் எவ்வித உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.