முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு!

Report Print Siva in சமூகம்

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் அதி கஷ்ட பிரதேசத்தில் அமைந்துள்ள முதேறாங்கண்டல் அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் 228 மாணவர்களுக்கு நேற்றைய தினம் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த பாதணிகளுக்கான நிதியினை லண்டன் கற்பகபதி கற்பக விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் லண்டன் உயர்வாசற் குன்று முருகன் ஆலய நிர்வாகத்தினர் வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வு நேற்று காலை 11 மணியளவில் பாடசாலை முதல்வர் பி.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சிவ.கஜேந்திரகுமார், இலங்கை கிளையின் தலைவர் மயூரக்குருக்கள் , சமூக செயற்பாட்டாளர் திலகநாதன் கிந்துஜன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்து மாணவர்களுக்கான பாதணிகளை வழங்கி வைத்தனர்.