தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் நள்ளிரவில் புகுந்து அடித்து நெருக்கிய மர்மநபர்கள்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

நள்ளிரவில் அலுவலகம் உடைக்கப்பட்டு சோதனை இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, அலுவலகத்தின் முன் கதவு மற்றும் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.