வவுனியா ஆலயத்தில் திருட்டு முயற்சி! ஆலய மணியினால் தப்பியோடிய திருடர்கள்

Report Print Siva in சமூகம்

வவுனியா கோவில் புதுக்குளம் மகாவிஷ்ணு ஆலயத்தில் திருட்டு சம்பவம் ஓன்று இன்றைய தினம் பொதுமக்களால் முறியடிக்கபட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

“குறித்த ஆலயத்தில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் நான்குபேரை கொண்ட குழுவினர் ஆலயத்தின் வாசல்பகுதியூடாக உள்நுளைந்துள்ளனர்.

அதனை அவதானித்த ஆலயத்தின் காவலாளி ஓடிச்சென்று ஆலயத்தின் மணியை அடித்துள்ளார். இதனால் அருகில் இருந்த பொதுமக்கள் ஆலயத்திற்குள் ஒன்று கூடினர்.

இதனால் செய்வதறியாத திருடர்கள் தப்பி ஓடியுள்ளனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றதடுப்பு பிரிவில் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திலும் அண்மையில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.