யாழ். மாவட்ட போராளிகள் மற்றும் இளையோர் சந்திப்பு!

Report Print Kalaiyarasi Kalaiyarasi in சமூகம்

போராளிகள் ஒருங்கிணைப்பு குழுவின் யாழ். மாவட்ட போராளிகள் மற்றும் இளையோர் சந்திப்பு இன்று யாழ். கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள சென் பீற்றர் அரங்கில் யாழ். மாவட்ட அமைப்பாளர் என்.நாதன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது போராளி நண்பர்கள் மற்றும் இளையோர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடக்கிய பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு போராளிகள் ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக அரசியற் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனை மற்றும் போராளிகளின் எதிர்கால பயணம் தொடர்பான மனோ நிலை என்பவை உள்ளடக்கிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.