நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் அகதி ஒருவர் மரணம்!

Report Print Murali Murali in சமூகம்

சிட்னி விலவூட் அகதிகள் தடுப்பு முகாமில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தடுப்புமுகாமிலுள்ள குறிப்பிட்ட நபரது அறையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Sierra Leone-ஐ சேர்ந்த 33 வயது நபர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்ததாகவும் அவர் நாடுகடத்தப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்டுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் அதேநேரம் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த மரணம் சந்தேகத்துக்கிடமானது அல்ல என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த மரணம் தவிர்த்திருக்கப்படவேண்டியது என்றும் அநியாயமானது என்றும் அகதிகள் நல அமைப்புக்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்த மரணம் தொடர்பாக உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளது.