வவுனியாவில் இடம்பெற்ற தேசிய ஊடக கல்வி நிகழ்ச்சி!

Report Print Murali Murali in சமூகம்

வவுனியா மடுக்கந்தை ஸ்ரீ தம்பரத்தின வித்தியாலய யத்தன பிரிவேனா பாடசாலையில் தேசிய ஊடக கல்வி நிகழ்ச்சி திட்டம் முன்னெடுப்பு விழிப்புணர்வு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு ஊடகக்கல்வியை நடைமுறைப்படுத்துவதின் முக்கியத்துவம் பற்றிய தெளிவூட்டல் நிகழ்வுகள் வவுனியா மடுக்கந்தை ஸ்ரீ தம்பரத்தின வித்தியாலய யத்தன பிரிவேனா பாடசாலையில் நடைபெற்றது.

சிங்கள மொழி மூலம் நடை பெற்ற இந்த நிகழ்ச்சித்திட்டம் வவுனியா மாவட்ட செயலக ஊடக இணைப்பாளர் உப்பில்பாலசூரிய தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தகவல் திணைக்கள உதவிப் பணிப்பாளர் நிர்மலி பிரியாங்கனி குமாரகே, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் மற்றும் தகவல் தினணக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியளாலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகக்கல்வியால் கிடைக்கும் பலாபலன்கள் பற்றியும், ஊடகங்கள் ஆற்றிய சேவைகள் குறித்தும் மாணவர்களின் கேள்விகளுக்கு ஊடகவியலாளர்களினால் பதில் அளிக்கப்பட்டது.