கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடும் சிரமத்திற்குள்ளான பயணிகள்

Report Print Vethu Vethu in சமூகம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளின் பயண பைகளை அனுப்பும் இயந்திரம் செயற்படாமையினால் நேற்று இரவு பயணிகள் கடும் சிமரத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

இதனால் கட்டுநாயக்க விமானத்தில் பாரிய நெரிசல் ஒன்று ஏற்பட்டதன் பின்னர் விமான நிலைய ஊழியர் பிரிவை சேர்ந்தவர்கள் அவ்விடத்திற்கு சென்று செயலிழந்த இயந்திரத்தை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

குறித்த இயந்திரத்தின் மீது அளவுக்கு அதிகமான நிறையை கொண்ட பைகளை வைப்பதனால் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான நிலை ஏற்படுவதாக குறித்த பிரிவின் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

வாரத்திற்கு ஒரு முறை இந்த நிலைக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்படுதாக அவர் கூறியுள்ளார்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் விமான நிலைய பராமரிப்பு பிரிவினர் உடனடியாக இயந்திரத்தை சீர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

இயந்திரத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.