திருகோணமலை பிரதம நீதவான் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதியில் நேற்றிரவு இருக்கும்போது ஹம்ஸாக்கு தலைசுற்று மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதையடுத்து அவரது பாதுகாவலர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து அவர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.