மகாத்மா காந்தியின் 71ஆவது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு

Report Print Sumi in சமூகம்

பாரத தேசத்தின் தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தியின் 71 ஆவது நினைவு தினம் இன்று யாழில் நினைவு கூறப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வினை அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை தூதரகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையின் வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு காலை 9.30 மணியளவில் இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், முன்னாள் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த ரகுபதி ராகவ ராஜாராம் பாடலும் இசைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.