திருகோணமலையில் மசாஜ் நிலையங்களை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில் சட்டவிரோதமாக இயங்கும் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை மூடுமாறு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை நிலாவெளி பிரதான வீதி அலஸ் தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அனுமதிப் பத்திரம் வழங்கப்படாத குறித்த பல மசாஜ் நிலையங்கள் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது இதனால் மசாஜ் நிலையங்களில் விபச்சாரம் சமூக விரோத செயல்கள் இடம் பெற்று வருவதாக கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை நகர சபையினால் வழங்கப்பட்டு வரும் மசாஜ் நிலையங்களுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்கும் போது ஆராய்ந்து சட்டரீதியாக வழங்குமாறும் விபச்சாரமற்ற சமூக விரோத செயல்களுக்கு இடம் கொடுக்காத வகையில் முன்னெடுக்குமாறும் மேலும் கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள் தங்களது ஆதங்கங்களை குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, “வேண்டாம் வேண்டாம் சமூக சீர்கேடு, சமூக சீர்கேடுகளை தடை செய்ய வேண்டும்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் பெருந்திரளனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.