மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி சுதந்திர தின துவிச்சக்கரவண்டி பவனி

Report Print Ashik in சமூகம்

கடந்த 24ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி பவனி மன்னாரில் இருந்து யாழ். நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த ரி.எச்.கெபட் பீரிஸ் என்ற 53 வயதுடைய வீரர் தனது குழுவினருடன் ஆரம்பித்துள்ள இந்த துவிச்சக்கரவண்டி பவனி நேற்று மாலை மன்னாரை வந்தடைந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த பயணம் இன்று காலை மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி தொடர்கிறது.

இதற்கு மத்திய விளையாட்டு திணைக்களத்தின் மாவட்ட விளையாட்டு பிரிவு மற்றும் உறுளை பந்தாட்ட சம்மேளனம் என்பன ஆதரவை வழங்கியுள்ளன.