கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக தங்கமுத்து ஜயசிங்கம் நியமனம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கத்தை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நியமித்துள்ளார்.

குறித்த நியமனம் இன்று இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு நியமனங்களை வழங்குதல், இடம் மாற்றங்களை செய்தல், உயர் பதவிகளுக்கு நபர்களை நியமித்தல் உட்பட அரச சேவைகளுடைய சகல நியமனங்களுக்கும் பொறுப்பான அதி உயர் ஆணைக்குழு இதுவாகும்.

இந்த ஆணைக்குழுவின் தலைவராகவே பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் உப வேந்தராக கடமையாற்றிய நீண்டகால அனுபவமிக்கவர்.

இதுவரை காலமும் இந்த ஆணைக்குழுவின் தலைவராக கொழும்பை சேர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி P.W.D.C.ஜயதிலக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.