கிழக்கு மாகாண ஆளுநரால் ஆசிரியர் நியமன கடிதம் வழங்கி வைப்பு

Report Print Mubarak in சமூகம்

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆளுநர் செயலகத்தில் இன்று சுமார் 19 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றி நியமனம் வழங்கப்படாதிருந்த நிலையில் ஆளுநரின் விஷேட பணிப்புரைக்கு அமைய மீண்டும் தகுதி அடிப்படையில் ஆசிரியர் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 19 நியமனத்தில் 18 தமிழ் பட்டதாரிகளும், ஒரு சிங்கள பட்டதாரியும் உள்வாங்கப்பட்டதோடு இந்த நியமனங்கள் உரியவர்களின் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.