திருகோணமலையில் ஏற்பட்ட விபத்தில் வயோதிப பெண் பலி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - தோப்பூர், அல்லைநகர் பகுதியில் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிப பெண் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

தோப்பூர் அல்லைநகர் பகுதியை சேர்ந்த 75 வயதுடைய எம்.ரஹ்மத்தும்மா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வயோதிப பெண் வீதியை கடக்க முற்பட்ட வேளை பிரதான வீதியூடாக வந்த மோட்டார்வாகனம் அவர் மீது மோதியுள்ளது.

இதனால் அந்த பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தர்ப்பத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers