யாழில் சிறுமியொருவரை கடத்த முற்பட்ட ஒருவர் கைது

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - நாவந்துறை பகுதியில் சிறுமி ஒருவரை கடத்தும் நோக்குடன் நடமாடிய சந்தேகநபர் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து கட்டிவைத்த நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சந்தேகநபர் கடந்த வாரம் நாவந்துறை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை கடத்திச் செல்ல முற்பட்டார் என்றும், அதேபோன்று நேற்றைய தினமும் சிறுமியை கடத்தும் நோக்கோடு குறித்த பகுதிக்கு வருகை தந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவரெனவும், சமையல் வேலைக்காகவே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவம் குறித்து பொலிஸாருக்கும் தகவல் வழங்கிய போதிலும் சுமார் 2 மணிநேரத்துக்கு பின்னரே சம்பவ இடத்திற்கு வருகை தந்து சந்தேகநபரை கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.