மீண்டும் நடந்த மகிந்த குடும்பத்து திருமணம்! மோசடியுடன் தொடர்புடையவர் எடுத்து கொண்ட செல்ஃபி

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கடைசி புதல்வர் ரோஹித்த ராஜபக்சவின் திருமண வைபவத்தில், மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய அர்ஜூன் அலோசியல் கலந்து கொண்டதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

புதுக்கடை உயர் நீதிமன்றத்திற்கு எதிரில் செய்தியாளர்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இந்த தகவலை கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அர்ஜூன் ஆலோசியஸின் மனைவி, ரோஹித்த ராஜபக்ச தம்பதியுடன் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படம் தனக்கு கிடைக்க உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் இதனை பொறுப்புடன் கூறுகிறேன். எனக்கு எதிராக வழக்கும் தொடுக்கலாம். நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, அர்ஜூன் அலோசியஸ்சை பெரிதாக விமர்சிக்க மாட்டார். இவர்கள் ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள்” என ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அர்ஜூன் அலோசியஸ் 10 மாதங்களுக்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன் அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.