வத்தளையில் இந்து தேசிய பாடசாலை

Report Print Steephen Steephen in சமூகம்

கம்பஹா மாவட்டம், வத்தளை பிரதேசத்தில் இந்து தேசிய பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன், அமைச்சரவையில் தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சவை அனுமதி வழங்கியுள்ளது.

வத்தளை பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மொழிமூலம் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அருண் பிரசாத் நிதியம், கல்வி அமைச்சுக்கு இலவசமாக வழங்கிய காணியில் இந்த தமிழ் பாடசாலை நிர்மாணிக்கப்பட உள்ளது.

களனி கல்வி வலயத்திற்குரிய வத்தளை பிரதேசத்தில் அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலை என்ற பெயரில் இந்த பாடசாலை ஆரம்பிக்கப்பட உள்ளது.