வவுனியாவில் படைப்புழுக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த விழிபுணர்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளில் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த விசேட விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விழிபுணர்வு ஊர்வலம் வவுனியா விவசாய கல்லூரி மாணவர்களால் அதிபர் திருமதி கே.சந்திரகாசன் தலைமையில், இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, தாண்டிகுக்குளம் பகுதியில் உள்ள விவசாய கல்லூரியில் இருந்து ஊர்வலமாக வந்த விவசாய கல்லூரி மாணவர்கள் வவுனியா நகரம், திருநாவற்குளம், மடுகந்தை, கோவில்குளம் ஆகிய பகுதிகளுக்கு ஊர்வலமாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்ததுடன் படைப்புழுக்களின் தாக்கம் தொடர்பிலும், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறை தொடர்பிலும் மக்களுக்கு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...