அரசாங்க ஊழியர்களுக்கு ஆளுநர் கொடுத்த அதிர்ச்சி!

Report Print Vethu Vethu in சமூகம்

அரச ஊழியர்களின் செயற்பாடு தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் செற்பாடு காரணமாக அரச சேவை நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளமை தெளிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கையடக்க தொலைபேசியில் குறுந்தகவல் சத்தம் டுக் டுக் என கேட்கும்.

அதன் பின்னர் பேஸ்புக் சென்று விடுவார்கள். அரச ஊழியர்கள் சரியான முறையில் எத்தனை மணித்தியாலங்கள் பணி செய்கின்றார்கள் என சிந்தித்து பாருங்கள்.

வேலை செய்பவர்கள் உயிர் போகும் வரை வேலை செய்கின்றார்கள். வேலை செய்யாதவர்கள் ஏமாற்றி கொண்டிருக்கின்றார்கள்.

யாராவது அரச ஊழியர்கள் பணி செய்யும் போது பேஸ்புக் பயன்படுத்தினால் பிறகு என்ன நடக்கும் என தெரியாது. பேஸ்புக்கை தடை செய்துவிட்டு தான் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மக்கள் சேவை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.