பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள மக்களிற்கு தொழில் வாய்ப்பினைக் ஏற்படுத்தி கொடுப்பதற்கான செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, முதலைக்குடாவில் அமைந்துள்ள T.R அறக்கட்டளை அலுவலகத்தில் கடந்த 27ஆம் திகதி இச் செயற்திட்டம் நடைபெற்றுள்ளது.

T.R அறக்கட்டளையின் அனுசரணையுடன் மனிதவள பயிற்சி நிலையத்தின் வளவாளர்களால் இச் செயற்திட்டம் இடம்பெற்றுள்ளது.

க.பொ.த (சா/த) தரம் மற்றும் க.பொ.த (உ/த) தரம் படித்துவிட்டு தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு ஆறு மாதகால பயிற்சி வழங்கிய பின்னர் தொழிலில் இணைப்பு செய்து அவர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி நெறியானது ஆறு மாதங்களில் ஆங்கிலம், கணணி, சிங்களம் மற்றும் மென்திறன்கள் போன்ற கற்கைநெறிகளை உள்ளடக்கியதாக அமையப்பெற்றுள்ளது.

மேலும், மூன்றாவது மாதம் அவர்களுக்குத் தனித்தனியாகத் தொழிற்பாதை வரையப்பட்டு, ஐந்தாவது மாதம் களப் பயணம் மேற்கொள்ளப்பட்டு, ஆறாவது மாதம் தொழிலில் இணைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.