8085 ஏக்கர் காணிகளை கையளிக்க இராணுவம் நடவடிக்கை!

Report Print Theesan in சமூகம்

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 8085 ஏக்கர் தனியார் மற்றும் அரச காணிகளை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் படையினரின் பயன்பாட்டில் இருந்த 4.5 ஏக்கர் அரச காணி 54 படைப்பிரிவின் படைத்தளபதி பிரிகேடியர் செனரத் பண்டார தலைமையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்தாசிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக வன்னி பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா தலைமையில் அரச மற்றும் தனியார் காணிகள் 54.38 ஏக்கர் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம் கடந்த 22ஆம் திகதி கையளிக்கப்பட்டது.