தேடப்பட்டு வந்த இரண்டாம் நபரின் சடலம் மீட்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கிண்ணியாவில் மணல் ஏற்றும் போது கடற்படையினரின் துப்பாக்கி சூட்டிற்கு தப்பி ஒடிய மற்றுமொரு நபரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கிண்ணியாவைச் சேர்ந்த 18 வயதுடைய முகம்மது பசீர் றமீஸ் என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இவர் மணல் ஏற்றும் போது கடற்படையினரின் துப்பாக்கி சூட்டிற்கு தப்பிப்பதற்காக கங்கை ஆற்றில் குதித்து காணாமல் போன நிலையில் குறித்த பகுதியிலேயே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தை பிரதே பரிசோதனைக்காக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.