என் தற்கொலைக்கு வைத்தியரும், அவர் மனைவியுமே காரணம்! உயிரிழந்த யுவதியின் குரல் பதிவு

Report Print Sujitha Sri in சமூகம்

ஹட்டனில் தற்கொலை செய்து கொண்ட 22 வயது யுவதியான முருகையா சாந்தினியின் குரல் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

குறித்த யுவதி, தான் தற்கொலை செய்து கொள்வதற்காக மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் தன்னுடைய தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன என்பதை தெரிவித்து தனது குரலினை பதிவு செய்துள்ளார்.

ஹட்டன் - டன்பார் வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சில வருடங்கள், உயிரிழந்த யுவதியான முருகையா சாந்தினி பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் 90 மாத்திரைகளை உட்கொண்டு கடந்த 27ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று இறுதி கிரியைகள் செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த யுவதியின் குரல் பதிவு பகிரப்பட்டு வருகிறது. அந்த குரல் பதிவில், தன்னுடைய தற்கொலை முயற்சிக்கு வைத்தியரும் அவரது மனைவியும் தான் காரணம் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.