கிராம சக்தி செயல் திட்டம் நிகழ்ச்சி தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

Report Print Vamathevan in சமூகம்

ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கிராம சக்தி செயல் திட்டம் நிகழ்ச்சி தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று காலை அச்சுவேலி, தோப்பு பகுதியில் அமைந்துள்ள கிராமசக்தி மக்கள் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ள இடத்தில் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கிராம சக்தி செயல் திட்டம் எதிர்வரும் 6ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு கோப்பாய் பிரதேச செயலர் சுபாசினி மதியழகன், கலநலசேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் நிசாந்தன், கிராம சக்தி செயல்திட்டத்தின் யாழ். மாவட்ட அதிகாரி வன்னியசிங்கம் கபிலன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களுடன் திட்டங்கள் குறித்து ஆராய்ந்திருந்தனர்.

கலந்துரையாடலில் கிராமசக்தி செயல் திட்டத்தின் முக்கியத்துவம், மற்றும் போதை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதியின் எண்ணகரு தொடர்பான விழிப்புணர்வும் இடம்பெறும்.

மேலும் கிராம சக்தி செயத்திட்டத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய வீட்டு திட்டம், விவசாய கிணறுகள் புனரமைப்பு, வீதிகள், ஆகியனவற்றிற்கு முன்னிலை அளித்து அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்களின் கருத்தை பெற்றிருந்தனர்.

கைத்தொழில் பேட்டை வலயமாக இயங்கி வரும் அச்சுவேலி பிரதேசத்தில் நெசவு ஆலை ஒன்றையும் இந்த திட்டத்தினுள் உள்வாங்குவதன் மூலம் ஏராளமான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

கிராம சக்தி செயல் திட்டத்திற்காக யாழ். மாவட்ட செயல் திட்ட பொறுப்புக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற உள்ளது.