அநுராதபுரத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு

Report Print Mubarak in சமூகம்

அநுராதபுரம் மாவட்டத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் - கிவுல்பிட்டிய, மஹாபொத்தான வயலில் கட்டப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்தமையால் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

கிவுல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.