இல்மனைற் கம்பனி அமைக்கும் திட்டத்திக்கு எதிராக ஆா்பாட்டம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - வாகரை பிரதேசத்தில் கனிய மண் இகழ்வு தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்துமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கதிரவெளி பிரதேச பொதுமக்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களால் இவ் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களான பால்சேனை வடக்கு தொடக்கம் வெருகல் வரையான கதிரவெளி, புதூர், புச்சாக்கேணி, ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக கனிய மணல் அகழ்வு மற்றும் தொழிற்சாலை அமைக்கும் ஆரம்ப வேலைகள் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமக்கு எந்த விதமான தெளிவூட்டல்களும் இல்லையென்றும் இவ் தொழிற்சாலை அமைப்பதனால் சூழல் பாதிப்பு ஏற்படும் எனறும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதன் போது அரச அதிகாரிகளே, அரசியல்வாதிகளே, எமது பிரதேச மக்களை பாதிக்க கூடிய கனிய மணல்(இல்மனைட்) அகழ்வு பணியினை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள்.

எமது தாய் மண் எங்களை வாழ வைக்கும் மண். எங்களுக்கு சோறு போடும் மண்விற்காதே விற்காதே தாய் மண்ணை விற்காதே என கோசங்களை ஏற்படுத்திவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது கோரிக்கை அடங்கிய மகஜர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான. சீ.யோகேஸ்வரன்,எஸ். வியாழேந்திரன், பிரதேச சபை தவிசாளர் சி.கோணலிங்கம், பிரதேச செயலாளர்.எஸ் ஹரன்.மற்றும் வாகரை பொலிஸ் அதிகாரியிடம் கையளித்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூடட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர். சி.யோகேஸ்வரன், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாகவும் இல்மனைட் மணல் எடுப்பதனால் கதிரவெளி, புச்சாக்கேணி, பால்சேனை, புதூர். போன்ற பிரதேச மக்களின் வாழ்வில் பாதிப்பு ஏற்படும்.

அரசியல்வாதிகளாக இருக்கலாம், அரச அதிகாரிகளாக இருக்கலாம் இவ்விடயத்திற்க்காக லஞ்சம் வாங்கினால் ஆதாரத்துடன் தன்னிடம் சமர்பித்தால் தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் அத்துடன் மிக விரைவாக சமுக நல வழக்கு தொடர்ந்து இவ் செயற் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.