கிளிநொச்சியில் எதனோல் கொள்கலன்கள் அழிப்பு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக கைப்பற்றப்பட்ட எதனோல் அடங்கிய கொள்கலன்கள் அழிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, உமையாள் புரம் பகுதியில் இன்று நீதிமன்றப் பதிவாளர் மற்றும் அதிரடிப் படையினர், பொலிஸார் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் கொள்கலன்கள் அழிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கடந்த 24ம் திகதி விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் எதனோல் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்ட சுமார் 7000 லிட்டர் எதனோல் அடங்கிய சுமார் 330 கொள்கலன்களின் பெறுமதி இரண்டரைக் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இக்குற்றச் செயலுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் கடந்த 24ஆம் திகதி குறித்த இரு சந்தேக நபர்களையும் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 31ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest Offers