பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்

Report Print Kumar in சமூகம்

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு, சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற ஒன்றியங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் இக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்படவுள்ள நிலையில் அது தொடர்பான நிலைமைகளை அறிந்துகொள்ளவும் அதற்கு எதிரான அழுத்தங்களை வழங்கும் வகையிலும் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் எம்.மோகன், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை உட்பட பலர் கலந்து கொண்டனர்.