20 இலட்சம் பெறுமதி வாய்ந்த காட்டு மரங்களைக் கைப்பற்றிய பொலிஸார்

Report Print Navoj in சமூகம்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைக் கிராமமான வடமுனை மீராண்ட வில் காட்டுப் பகுதியில் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி மறைத்து வைக்கப்பட்ட பெறுமதி வாய்ந்த 74 காட்டு மரத் துண்டுகளை கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.

தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, தனது தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்க்கு சென்று அவற்றினை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தார்.

இதன் பெறுமதி சுமார் 20 இலட்சமாகும் என்றார்.

முதிரை, பாலை,தேக்கு போன்ற பெறுமதியான மரத் துண்டுகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.