சட்டவிரோதிகளின் அச்சுறுத்தல்! பாடசாலையின் மெய்வல்லுநர் போட்டிகள் இரத்து

Report Print Suman Suman in சமூகம்

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் விளைவால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன

பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இன்று இடம்பெற இருந்தன.

அதக்கான ஏற்பாடுகள் நேற்றிரவு (29) மேற்கொள்ளப்பட்டன. இதன் போது பாடசாலைக்குள் புகுந்த குழு ஒன்றினால் மாணவன் ஒருவன் தாக்கப்பட்டதோடு, ஆசிரியர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு இரவு 11 மணிக்கு பாடசாலைக்கு பொலிஸார் வருகை தந்து ஆசிரியர்களை பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் எடுத்து இன்று(30) இடம்பெறவிருந்த இல்ல மெய் வல்லுநர் போட்டிகளை இரத்துச் செய்துள்ளார்.

இல்லங்கள் அலங்கரிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டமை மாணவர்களை மனதளவில் பாதித்திருக்கிறது.

மாணவனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலேயே உரிய தரப்பினர்கள் விரைந்து நடவடிக்கைகளில் இறங்கியிருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இதுவரைக்கும் மூன்று பெண்களை மாத்திரமே கைது செய்துள்ளனர்.