தமிழர் பகுதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட இருவர் கைது

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட இருவர் நேற்று மாலை இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து இலஞ்சம் வாங்கியபோது இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் மண் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவரிடம் மண் லொறியொன்றை விடுவிப்பதற்கு 25ஆயிரம் ரூபாவினை குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பெற்றுள்ளதுடன் அதற்கு உடந்தையாக இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிசிர பண்டார மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.

விசாரணைகளை தொடர்ந்து இருவரையும் இன்று வியாழக்கிழக்கிழமை அம்பாறை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest Offers

loading...