கொழும்பில் சிக்கிய தம்பதி! மிரண்டு போன பொலிஸார்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் பெருந்தொகை பெறுமதியான ஹெரோயினை வைத்திருந்த கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 36 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் கணவன் களனி ஊழல் தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரி என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று மாலை கிரிபத்கொட, ஈரியவெட்டிய வீதி பிரதேசத்தில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 3 கிலோ கிராம் நிறைக்கும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.

சந்தேக நபர்களான இந்த தம்பதியினால் பல்வேறு பெயர்களில் ஹெரோயின் விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.

இந்த பெயர்கள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய பொலிஸாரினால் சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் தெஹிவளையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையுடன் இந்த தம்பதிக்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...