காட்டு பகுதியில் முற்றுகையிடப்பட்ட இடம்: ஒருவர் கைது

Report Print Theesan in சமூகம்

மன்னார் - மடு, தட்சனாமருதமடு காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நபரே சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது வன்னிப்பிராந்திய போதை ஒழிப்புப்பிரிவினரால் முற்றுகையிடப்பட்ட இடத்திலிருந்து 187 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரை விசாரணைகளின் பின் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக போதை ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Latest Offers