சிவஞானம் சிறீதரனுக்கும் சந்தை வர்த்தகர்களுக்கும் இடையில் சந்திப்பு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி பொதுச்சந்தையில் வங்கிக்கடனைப் பெற்று வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக சந்தை வர்த்தகர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள அறிவகம் எனும் அவரது அலுவலத்தில் சந்தை வர்த்தகர்களுக்கும் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போதே வர்த்தகர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள்,

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிப்பிரதேசங்களில் இருந்தும் வரும் நடமாடும் வர்த்தகர்கள் கட்டுப்பாடுகளின்றி தமது பொருட்களை மக்கள் கூடும் இடங்களில் வைத்து மிகக்குறைந்த விலைகளில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இவ்வாறு ஈடுபடுபவர்கள் சந்தைக்குரிய வாடகை, கட்டடம், மின்சாரக்கட்டணம் எதுவும் செலுத்துபவர்கள் அல்ல.

ஆனால், சந்தை வர்த்தகர்கள் அவ்வாறல்ல, அவர்கள் கட்டணம் செலுத்துபவர்கள்.

இந் நிலையில் பொதுச்சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சந்தை வர்த்தகர்கள் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தை வர்த்தகர்கள் வங்கிகளில் கடன்களை பெற்று தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில் வியாபாரமின்றி கூலி வேலை செய்தே வங்கிக்கடன்களை செலுத்த வேண்டிய நிலை இதனால் ஏற்பட்டுள்ளது.

தற்போது வங்கிக்கடன்களை பெற்று மீளச்செலுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக வங்கிகள் வழக்குத்தாக்கல் செய்துள்ளன.

கிளிநொச்சி பொதுச்சந்தையில் புடவை மற்றும் அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களே இவ்வாறு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.