திருகோணமலையில் கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - ரொட்டவெவ பகுதியில் 175,000 ரூபா கள்ள நோட்டுக்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை நேற்றிரவு கைது செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த அபூபக்கர் தெளபீக் (52வயது) எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, சந்தேகநபரை சோதனையிட்ட போதே அவரின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை ஹொரவபொத்தான நகர் பகுதியில் 1000 ரூபா தாள்கள் 29 உடன் திருகோணமலை - மஹதிவுல்வெவ பகுதியை சேர்ந்த 3 நபர்களை ஹொரவபொத்தான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Latest Offers

loading...