கிளிநொச்சியில் படைப்புழு தொடர்பில் விழிப்புணர்வு பேரணி

Report Print Suman Suman in சமூகம்

இதுவரை காலமும் இலங்கையில் கண்டுபிடிக்கப்படாத பீடையான படைப்புழு பற்றிய விழிப்புணரவு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி, கரடி போக்கு சந்தியிலிருந்து டிப்போ சந்தி வரை இடம்பெற்றுள்ளது.

இந்த பேரணியில் விவசாய திணைக்களத்தினர், கமநல சேவைகள் திணைக்களத்தினர், யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீட மாணவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சோளம், இறுங்கு, கரும்பு, நெல், மரக்கறிகள், பழங்கள், அவரைப் பயிர்கள், உட்பட நூற்றுக்கு மேற்ப்பட்ட பயிர்களை அழிக்க கூடிய பீடை இதுவாகும்.

எனவே இது தொடர்பான விழிப்புணர்வுகளை விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இப் பேரணி நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...