சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த நபர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான கடற்படையினர் யாழ்ப்பாணம், மண்டைத்தீவு கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர், சட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்திருப்பது தெரியவந்துள்ளது.

49 வயதான இந்த சந்தேக நபர் இரத்தினபுரி மாவட்டம் பெல்மதுளை பிரதேசத்தை சேர்ந்தவர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மண்டைத்தீவு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.