நடுத்தெருவில் தவித்த மணமகன், மணமகள்! கொழும்பில் நடந்த சம்பவம்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு காலிமுகத்திடலில் மணமகன் மற்றும் மணமகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுற்றுவட்டத்த அண்மித்த பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவசர நிமித்தம் பயணம் மேற்கொள்ளும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு முகங்கொடுப்பதாக பலரும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

காலிமுகத்திடலை அணித்த பகுதிகளில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் அமைந்துள்ளன.

இன்றைய தினம் திருமணம் செய்து கொள்ள விருந்த திருமண ஜோடிகள் கடும் வாகன நெரிசல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட நேரத்திற்கு ஹோட்டலை சென்றடைய முடியாத நிலையில், தங்கள் மோட்டார் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்துச் சென்றுள்ளனர்.

இந்த வாகன நெரிசல் காரணமாக நோயாளர் காவு வண்டிகள் பலவும் சிக்கித் தவிப்பதாக தெரிய வருகிறது.