கிளிநொச்சியில் படைப்புழுக்களின் தாக்கம் குறித்து விழிப்புணர்வு பேரணி

Report Print Yathu in சமூகம்

நாட்டின் பல பகுதிகளிலும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள படைப்புழுக்களின் தாக்கம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, கரடி போக்கு சந்தியில் இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இப் பேரணி ஆரம்பமானது.

இதன்போது படைப்புழுக்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் தொடர்பான துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் விவசாய செய்கையில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் படைப்புழுவிலிருந்து பாதுகாக்கும் முறைமைகள் தொடர்பாகவும் விவசாயிகள், பொது மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளன.

Latest Offers