கஞ்சாவுடன் ஈரானிய பெண் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

ஹைரைட் குஷ் என்ற பெயரில் அழைக்கப்படும் 400 கிராம் கஞ்சாவை தனது பயண பொதியில் சூட்சமான முறையில் மறைத்து எடுத்து வந்த ஈரானிய பெண்ணை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.

இதன் போது கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி சுமார் 16 இலட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் 24 வயதுடையவரெனவும், ஈரானில் இருந்து கத்தார் வழியாக கத்தார் எயார்வஸ் விமானத்தில் இலங்கை வந்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வங்கி வளாக பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஈரானிய பெண் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, தடுப்பு காவல் உத்தரவை பெற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.